Developed by - Tamilosai
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
81 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
100 கோடி தடுப்பூசி டோஸை கடந்த பிறகு நாடு புதிய ஆர்வத்துடன் முன்னேறுகிறது.
தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது.
தடுப்பூசி மைல் கல்லால் நாடு பெருமை அடைகிறது. இதற்காக சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களது உழைப்பால்தான் இதைச் சாதிக்க முடிந்தது. தடுப்பூசி இயக்கத்தின் வெற்றி இந்தியாவின் திறனையும் கூட்டு முயற்சி மந்திரத்தின் வலிமையையும் காட்டுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
தடுப்பூசி மைல் கல்லால் நாடு பெருமை அடைகிறது. இதற்காக சுகாதார பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்களது உழைப்பால்தான் இதை சாதிக்க முடிந்தது. தடுப்பூசி இயக்கத்தின் வெற்றி இந்தியாவின் திறனையும் கூட்டு முயற்சி மந்திரத்தின் வலிமையையும் காட்டுகிறது.
நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நமது சுகாதார பணியாளர்கள் இரவும் பகலும் பாடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் தங்களது உறுதியால் மனித குலத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு புதிய அளவுகோளை அமைத்தனர்’ என அவர் மேலும் தெரிவித்தார்.