Developed by - Tamilosai
உலகக்கிண்ண ரி – 20 தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி நமீபியா அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் டேவிட் விஸ் 26 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 வீக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும், கே.எல். ராகுல் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.