தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்தியாவை நெருங்கிய சீன தூதுவர்

0 101

வட மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன தூதுவர் குய் சென் ஹாங் இன்றையதினம் மன்னாருக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் இலங்கை கடற்பரப்பிற்குள் அமைந்துள்ள இராமர் பாலத்தின் மணல் திட்டுக்களை இன்று (17) பார்வையிட்டுள்ளார்.

மன்னார் வழியாக, சிறிலங்கா கடற்படைக்கு சொந்தமான விரைவு படகின் மூலம், இராமர் பாலத்தின் மூன்றாவது மணல் திட்டை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.

சிறிலங்கா கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சுமார் ஒரு மணிநேரம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றில் ஏறினர். 17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.

சுமார் 20 நிமிடங்களாக இராமர் பாலத்தில் இருந்த இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட் இராஜதந்திரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர். மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலுள்ள சிறிலங்கா கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவரிடம் இந்த பயணம் தொடர்பில் கொழும்பு ஊடகவியலாளர் வினவியபோது, இதுவே முடிவு மாத்திரமல்ல, ஆனால் ஆரம்பமும் கூட” என பதிலளித்தார்.

தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஶ்ரீ ராம்சேது என வணக்கத்திற்குரிய புனித பகுதியாகவும் இந்திய மக்களால் போற்றப்படுகின்றது. இந்த 16 மணல் திட்டுக்களில் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் எஞ்சிய 8 இந்தியாவிற்கும் உரியவையாகும்.

Leave A Reply

Your email address will not be published.