தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல

0 452

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல என்றும், கூட்டாளிகள் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, திடீர் பயணமாக கடந்த 25-ம் திகதி இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்த வாங் யி, தனது இந்திய பயணம் குறித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

இருதரப்பு உறவுகளின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்வது மற்றும் நடைமுறை சிக்கல்களை சரியாக தீர்ப்பது, கையாள்வது போன்றவற்றில் ஒருமித்த கருத்தை கடைப்பிடிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள். ஒருவரையொருவர் குறைத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவ வேண்டும் என்று வாங் யி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.