தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் கப்பல்

0 53

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பமானது.

இதன் முதலாவது பயணிகள் கப்பல் இந்தியாவில் இருந்து இன்று (14) காலை இலங்கையை வந்தடைய உள்ளதாக, கப்பல் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நாகப்பட்டினம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையில் இந்த பயணிகள் கப்பல் சேவை இடம்பெறுகிறது.

நாகப்பட்டினத்தில் இருந்து 50 பயணிகளுடன் கப்பல் இன்று காலை 11.30 மணி அளவில் காங்கேசன்துறை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.