Developed by - Tamilosai
இந்தியாவில் இதுவரை 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பமாகியது.
தற்போது 100 கோடி டோஸ்கள் என்ற மைல்கல்லை 278 நாட்களில் இந்தியா எட்டியுள்ளது. முதன்முறையாக ஜனவரி 16 ஆம் திகதி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியானவர்களில் 30 சதவீதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் 70.7 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்து வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.