Developed by - Tamilosai
இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம் குஷிநகரில் தரையிரங்கியதையடுத்து, இந்தியாவின் புதிய சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாகவும்,உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் முதலாவது விமான நிலையம் இலங்கையிலிருந்து வருகை தருமாயின் அது குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாக இந்திய பிரதமர் இதற்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருந்தார்.
அதற்கமைவாக குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படுவதை குறிக்கும் வகையில் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ள ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் முதலாவதாக அங்கு தரையிறங்கியுள்ளது.