தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்தியாவின் கனவு தகர்ந்தது – ஆப்கானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து

0 145

ரி – 20 உலகக் கிண்ணத் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. 

அபுதாபியில் இடம்பெற்ற இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

ஆரம்ப வீரர்கள் மார்ட்டின் குப்தில் 28 ரன்களும், டேரில் மிட்செல் 17 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து அணித்தலைவர் வில்லியம்சன் (40 ரன்- நாட் அவுட்) கீப்பர் தேவன் கான்வாய் (36 ரன் -நாட் அவுட்) ஆகியோர் கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து வைத்தனர். 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.

இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் முன்னேறியது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால் இந்தியா ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்பிருந்தது.

ஆனால் நியூசிலாந்து வெற்றி பெற்றதால் இந்தியாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது.

Leave A Reply

Your email address will not be published.