Developed by - Tamilosai
எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் காணப்படும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு காரணமாக இந்த கடனுதவியை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து நேரடியாக மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.