Developed by - Tamilosai
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள பழமையான டச்சுக் கோட்டையில் சண்டைக்காட்சிகளை படக்குழு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 நாட்களாக நடந்து வரும் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க கிராமத்து மக்கள் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று நடந்த படப்பிடிப்பில் அருகில் இருந்த ஊரில் கோவிலுக்கு நிதி கேட்டு சிலர் வந்ததாகவும் இது தொடர்பான பேச்சு வார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டு படப்பிடிப்பை கிராமத்து மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் காவல் துறையினர் விரைந்து வந்து ஊர் மக்களுடன் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இதன் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்த சண்டைகாட்சிக்காக கமல்ஹாசன் சிறப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.