Developed by - Tamilosai
தேர்தல் முறைமைகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.
எவ்வாறிருப்பினும் இந்த ஆண்டில் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை மேற்கொள்வது சாத்தியமற்றது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான இந்தியாவின் கடன் திட்டத்திற்கும் மாகாண சபைத் தேர்தல்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.