Developed by - Tamilosai
நேற்று இரவு இத்தாலியின் மார்ச்சே பகுதியில் ஒரே நாளில் பெய்த கனமழையில் ஒன்பது பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் சுமார் 400 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், காணாமல் போன நான்கு பேரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.