தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இத்தாலியில் இரண்டு பெண் பிள்ளைகள் கொலை! இலங்கை பெண் தலைமறைவு

0 232

இத்தாலியில் வெரோனா நகரத்திலுள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த  இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை கொலைக்கான காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 33 வயது  சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ என்பவர்  தனது 11 வயது சாபதி  மற்றும் 3 வயது சாந்தனி என்ற இரு மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியில் வெரோனா நகரத்தில் வசித்து வந்துள்ளார்.

வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில்,  நேற்றுக் காலை குறித்த இரு பிள்ளைகளும் அவர்களின் தாயால் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து குறித்த தாய் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

போர்டோ சான் பான்கிராசியோ மாவட்டத்திலுள்ள வெரோனா நகராட்சியின் பெண்கள் காப்பகத்திலேயே குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பிரேத பரிசோதனை அதிகாரியின் முதற்கட்ட விசாரணைகளின்படி உயிரிழந்த பெண் பிள்ளைகளான சாபதி மற்றும் சாந்தனி அவர்களின் உடலில் தாக்குதல் மேற்கொண்டதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என விசாரணைகளின் மூலம் சந்தேகிக்கப்படுகிறது.

இரண்டு சிறுமிகளின் பிரேத பரிசோதனை, அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த இன்று நடைபெறவுள்ளது.

குறித்த இரு பெண் பிள்ளைகளின் மரணமும் அந்ந  நகரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.