Developed by - Tamilosai
இணையம் ஊடாக விரிவுரைகள் நடத்தப்பட்ட போதிலும் அனைத்து பிரயோக பரீட்சைகள் மற்றும் ஏனைய பரீட்சைகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை-கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்
கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் மூடப்பட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஹோமாகம – பிட்டிபனயில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பீடம் மீள திறக்கப்படாமையினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நான்காம் கல்வி ஆண்டு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இணையம் ஊடாக விரிவுரைகள் நடத்தப்பட்ட போதிலும் அனைத்து பிரயோக பரீட்சைகள் மற்றும் ஏனைய பரீட்சைகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை என மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும் தற்போதைய சூழ்நிலையில் தமது பட்டப்படிப்பை நிறைவுசெய்ய அதிக காலம் செலவிட வேண்டியேற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட பேராசிரியர் சுமேத ஜயநெத்தியிடம் வினவியபோது, மாணவர்களின் சிரேஷ்டத்துவம் அடிப்படையில் பரீட்சைகளை நடத்துவதற்கான நேர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கமைய, விரைவில் பொது மற்றும் பிரயோக பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட பேராசிரியர் சுமேத ஜயநெத்தி கூறினார்.