தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இணையத்தளத்தை நீக்கிய பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

0 63

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (ஜூன் 18) வெளியிடப்பட்ட எரிபொருள் விநியோகப் பட்டியலை தமது இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கியுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் காரணமாக தற்போது எரிபொருள் விநியோகத்திற்காக 30% எரிபொருள் பவுசர்களே பயன்படுத்தப்படுவதாக பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எரிபொருள் இருப்பை சரிபார்க்க ICTA (Fuel.Gov.lk) உருவாக்கிய சிறப்பு இணையதளமும் நீக்கப்பட்டுள்ளது.

“அசௌகரியத்திற்கு மிகவும் வருந்துகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிடைத்த அறிவுறுத்தல்களின் காரணமாக இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாங்கள் விரைவில் திரும்பி வருவோம்” என்று இணையதளம் ஒரு அறிவிப்பில் கூறியுள்ளது.

இலங்கை வரலாற்றில் தற்போது மிக நீளமான டீசல் மற்றும் பெட்ரோலுக்கான எரிபொருள் வரிசையை காணக்கூடியதாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.