Developed by - Tamilosai
இலங்கையில் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக படையினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இந்த திட்டத்துக்காக 3000 சிறைக்கைதிகளும் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வீட்டு தோட்டங்கள், அரச அலுவலங்களில் பயிர்ச்செய்கை மற்றும் தரிசு நிலங்கள் என்பவற்றில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இத் திட்டத்துக்கு “இணைந்து பயிரிடுவோம், நாட்டை வெற்றியடையச்செய்வோம்” என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மாவட்ட மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் மக்களுக்கு தெளிவாக்கல் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த செயற்பாட்டில் பங்கேற்கும் வகையில் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பயிரிடும் வகையில் நெற்காணிகள் மற்றும் விளைநிலங்கள் தொடர்பில் ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.