Developed by - Tamilosai
எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு என்பன காரணமாக ஏராளம் நெருக்கடிகளை தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
தேயிலைத் தொழிற்சாலைகளை இயக்குவதற்கு டீசல் தேவை என்ற போதிலும் அண்மைக்காலமாக நாட்டில் டீசலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்ற காரணத்தினாலும் அத்துடன் உற்பத்திக்கான செலவும் அதிகரித்துள்ளதுடன், அதனை ஈடுகட்டப் போதுமான அளவில் தேயிலை உற்பத்தியும் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளமையாலும் தென்னிலங்கை தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்தரமான தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதிலும் தடங்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நீடிக்குமானால் தேயிலைத் தொழிற்சாலைகளை மூடுவதே ஒரே வழி என அதன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.