தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இங்கிலாந்து அபார வெற்றி!அவுஸ்திரேலியா படுதோல்வி!!

0 80

 ரி – 20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் அவுஸ்திரேலியா அணியை எதிர்த்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் ஆரோன் பின்ச் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் ​பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் றிஸ் ஜோர்டான் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி, 126 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஆரம்பம் முதல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 11.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 71 ஒட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.