தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இங்கிலாந்தில் சுட்டெரிக்கும் சூரியன்.. வெப்பத்தால் தார் சாலைகள் உருகின!!

0 15

இங்கிலாந்தின் வடமேற்கில் கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் கடந்த ஜூலை 19 அன்று 34.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது., 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதிவான முந்தைய 33.9 டிகிரி செல்சியஸ் என்ற  அதிகபட்ச வெப்ப நிலையை இது தாண்டியது. தார் சாலை உருகியது தொடர்பாக பிரிட்டனின் ரோட் ட்ரீட்மென்ட் அசோசியேஷன் கூறுகையில், சாலைகள் உருகுவதற்கு வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தொட வேண்டும். இருப்பினும் சாலையின் மேற்பரப்பு அதிக வெப்பத்தை உறிஞ்சுவதால், 25 டிகிரி செல்சியஸை தாண்டும் ஒரு வெயில் நாள் கூட தரையில் 50 டிகிரி செல்சியஸை உருவாக்க போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளது.

கடும் வெயில் காரணமாக வெப்பநிலை அதிகமாக இருக்கும் சில பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக ரயில் பாதைகள் மற்றும் பள்ளிகள் மூடப்படுவதால், வெப்பநிலை அதிகரிப்பு என்பது இங்கிலாந்தில் இதற்கு முன் இருந்திராத  வகையில் ரெட் அலெர்ட்டை தரும் அளவிற்கு உள்ளது. அதிகரித்து வரும் வெப்பத்தால் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளதால் வனத்துறை உட்பட பல துறைகள் உஷார்படுத்தப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.