Developed by - Tamilosai
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு தொடர்பில் தொடர்பில் கட்சித் தலைமைப்பீடத்துக்கு தெரிவுபடுத்தியுள்ளதாகவும் நம்பத்தகு உயர்மட்டத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் தெரியவருகையில்,
இவர்கள் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் நோக்கிலேயே பதவி விலக தீர்மானித்துள்ளனர்.
அதன்படி வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்தில் களமிறங்குவதற்கு தயாராகிவருகின்றனர்.
களமிறங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளிவந்த போதிலும் இன்னும் உறுதியான தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையில் பெயர்களை வெளியிட முடியவில்லை.
மேலும் சப்ரகமுவ, வடமத்திய, மேல் மற்றும் தென்மாகாணங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது