Developed by - Tamilosai
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசில் இருந்து விலகவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆட்சியின்கீழ் அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் பகிரப்பட்ட விதம் தொடர்பாக இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதன் பின்னர் அரசு பின்பற்றிய கொள்கை தொடர்பாகவும் இவர்களுக்கு அதிருப்தி இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், அண்மை காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இவர்களில் அதிருப்தியை மேலும் அதிகரிக்க செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை அரசில் அங்கம் வகிக்கும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து தமது முடிவு குறித்து ஜனாதிபதி அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.