தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆலயத்தில் வாள்வெட்டு – வவுனியா பொன்னாவரசன்குளத்தில் சம்பவம்

0 45

இன்று (09) வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (08 ) மாலை திருவிழாவின் போது ஆலயத்தில் நின்ற சிலருக்கும், ஆலய பகுதிக்கு வந்த பிறிதொரு குழுவினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.