தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆற்றில் பிள்ளையை வீசி, தாயும் தற்கொலை முயற்சி

0 16

வத்தளை – ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 42 வயதான தாயொருவர் வத்தளை – கதிரான பாலத்திற்கருகில் தமது 5 வயதுபிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

குறித்த பெண் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீசப்பட்ட பிள்ளையைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(16) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Leave A Reply

Your email address will not be published.