Developed by - Tamilosai
நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை பொலிஸார் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நுகேகொட – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் 54 பேர் கைதானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் வைத்தே இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடக குழுக்களால் நேற்றிரவு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், இராணுவத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.
மேலும் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி தாக்குதல் நடத்தியதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றிருந்தனர்.
நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.