Developed by - Tamilosai
ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவும் குறித்த நபர் அந்த இடத்தில் பாடிக்கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று தொடர்கின்றது