தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆர்ப்பாட்டங்களால் ஆபத்து; மக்களே! அவதானம்

0 55

நாட்டில் அமுலிலிருந்த பயணக்கட்டுப்பாடு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் தளர்த்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவதற்கு வாய்ப்பேற்படுத்தும் போராட்டங்களால் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மேலும் அதிகரிக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஆகவே போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும்போது உரிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் முழுமையாகப் பின்பற்றப்படுவது மிகவும் அவசியமாகும்.

மேலும் அண்மைக்காலத்தில் டெங்குப் பரவலும் தீவிரமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், கொவிட் வைரஸ் தொற்று மற்றும் டெங்கு நோய் ஆகிய இரண்டினதும் அறிகுறிகள் பெருமளவிற்கு ஒத்தவையாக இருப்பதனால் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் அடையாளங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவிலான வீழ்ச்சி அவதானிக்கப்படாத நிலையில், பொது இடங்களில் இடம்பெறும் ஒன்றுகூடல்களின்போது பின்பற்றப்படவேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை மறுபுறம் அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு துறையினரால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், மக்கள் போராட்டங்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன  என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.