Developed by - Tamilosai
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட, ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.