Developed by - Tamilosai
ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அப்படியே முடங்கியது.
இதன்பின், மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குனர் ஷங்கர் தெலுங்கிலும், கமல் ஹாசன் விக்ரம் படத்திலும் பிசியாகிவிட்டனர்.
இந்நிலையில், மீண்டும் இந்தியன் 2 துவங்கும் என்று சமீபத்தில் கமல் ஹாசன் கூறியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது மற்றொரு அப்டேட் கொடுத்துள்ளார்.
அதாவது, தற்போது ஷங்கர் ராம் சரண் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்தபின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று அவர் கூறியுள்ளார்.