Developed by - Tamilosai
குறித்த சிறுமி கடந்த 27 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆயிஷாவின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
சிறுமியின் சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து இன்று பிரதே பரிசோதனை இடம்பெற்றன. பாத்திமா ஆய்ஷாவின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.