தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆப்கானை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது பாகிஸ்தான்!

0 63

ரி – 20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் மொஹமட் நபி அதிகபட்சமாக 35 ஒட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

படிந்து வீச்சில் இமத் வசீம் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, 148 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் 51 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ரஷீத் ஹான் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.