Developed by - Tamilosai
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
ஆப்கானிஸ்தானில் இன்று (29) காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 173 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.