Developed by - Tamilosai
ஆனைக்கோட்டைப் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவிலேயே எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் வசிக்கும், நல்லூர் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரது வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை 5.45 மணியளவில் வெடிக்க ஆரம்பித்த அடுப்பு 7.30 வரையும் வெடித்துக்கொண்டிருந்ததாகவும் அதன்பின்னர் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்தித்திற்கு வந்து வெடிப்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், மானிப்பாய் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமைகளை பார்வையிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.