தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆசிரியர் சங்கப் போராட்டத்திற்கு பின்னணியிலல்ல முன்னணியில் ஜே.வி.பி.

0 304

அதிபர் – ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தினதும், விவசாயிகளினதும் போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி பின்னணியில் இருந்து செயற்படவில்லை. முன்னணியில் இருந்து செயற்படுகிறோம்.

ஏனெனில் அவர்களின் போராட்டமும், முன்வைக்கும் கோரிக்கைகளும் நியாயமானவை. 
நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளை தேர்தல் காலத்தில் அரசியலாக்கி மக்கள் விடுதலை முன்னணி இலாபமடையவில்லை. அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகிறோம்.

மாணவர்களின் மீது அக்கறை கொண்டுள்ளதைப் போன்று ஆசிரியர்களுக்கு எதிராகக் கருத்துரைக்கும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகள் அரச பாடசாலைகளிலா? தற்போது கல்வி கற்கிறார்கள் என்பது குறித்து பெற்றோர் முதலில் ஆராய வேண்டும்.

அரச சேவையில் ஆசிரியர் – அதிபர் சேவைக்கு தான் குறைந்தளவு மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு எதிராக செயற்படுவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.