Developed by - Tamilosai
ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் நியாயமானதாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்களை அச்சுறுத்துவதன் ஊடாக ஜனநாயக ரீதியான அவர்களது தொழிற்சங்க போராட்டத்தினை தடைசெய்ய முடியாது. எனவே ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.