தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: மாணவர்கள் ஏமாற்றம்

0 259

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வவுனியாவில் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் திரும்பிச் செல்லும்நிலை காணப்பட்டது.

200 இற்கு உட்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்குமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்த நிலையில் இன்று பாடசாலைகள் திறக்கப்படவிருந்த போதிலும் ஆசிரியர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவர்களது போராட்டம் தொடர்கின்றது.

இதேவேளை வவுனியாவில் 85 பாடசாலைகள் இன்று திறக்கப்படும் என வலயக்கல்வி அலுவலகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை பாடசாலைகள் பலவற்றின் முன் வாயிற்கதவு மூடப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இதன் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருந்தனர்.

இதேவேளை சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்ற போதிலும் குறைந்தளவான மாணவர்களே வருகை தந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.