தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வுகாண 30,000 மில். ரூபா நிதியொதுக்கீடு

0 249

அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான சமகால அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தனது உரையில்;

அரசாங்கப் பணியாளர்களின் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக 500 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, அரச சேவைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நிரந்தர நியமனம் வழங்க 7,600 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.