தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம்!

0 142

பாடசாலை ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு வெகுவிரைவில் அரசாங்கம்  தீர்வு வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலை சுமேதங்கர மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களது பெற்றோர்கள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கல்வி நடவடிக்கைகள் மீண்டும் அரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை அதிபர் – ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் காரணமாக மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம்  வெகுவிரைவில் தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், இந்நிலை தொடரும் பட்சத்தில் மாணவர்களது கல்வி நிலையானது கேள்விக்குறியாக மாறிவிடும் என்றும் தாம் அச்சத்தில் இருப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.