Developed by - Tamilosai
மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவருமான வின் டேயினுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் இந்தத் தண்டனையை இராணுவ ஆட்சியாளர்கள் வின் டேயினுக்கு விதித்துள்ளனர்.
தற்போது வின் டேயின் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும், சிறைத் தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்வார் எனவும் வின் டேயினின் சட்டத்தரணி தெரிவித்தார்.
80 வயதாகும் வின் டேயின், மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கட்சியின் முதல் முக்கிய தலைவர் ஆவார்
முன்னாள் இராணுவ வீரரான அவர், ஏற்கனவே இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய மற்றும் தைராய்ட் பாதிப்பு போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள அவர், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வருகிறார்.
மேலும், அவர் சுவாசிப்பதற்கு செயற்கையாக ஒட்சிஜன் செலுத்த வேண்டிய நிலையுள்ளது குறிப்பிடத்தக்கது.