தமிழ் ஓசை
தமிழ் ஓசை

’அஸ்வெசும’ வரிசையில் நின்றவர் மரணம்

0 51

பதுளை, எல்ல பிரதேச செயலகத்திற்கு இன்று காலை சென்ற 76 வயதான நபர் ஒருவர் வரிசையில் இருந்து போது மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நமுனுகுல தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த ராமையா குழந்தைவேலு (வயது 76) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பப்டிவம் பெறுவதற்காக பிரதேச செயலகத்தின் முன்னால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அங்கு வரிசையில் நின்ற சிலர் தெரிவித்தனர்.

எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.