Developed by - Tamilosai
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஷரீஆ சட்டம் குறித்து சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தக் கருத்து, இன முரண்பாட்டை ஏற்படுத்துவதாகத் தெரிவித்து மார்ச் 16 ஆம் திகதி சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை மீண்டும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.