தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அவுஸ்திரேலியா அபார வெற்றி! மேற்கிந்திய தீவுகள் ஏமாற்றம்!!

0 120

ரி – 20 உலகக் கிண்ணப் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நாணயச் சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்தது.

158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வோர்னர், ஆரன் பிஞ்ச் களமிறங்கினர். 3 ஆவது ஓவரில் பிஞ்ச் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து டேவிட் வோர்னர் – மிட்செல் மார்ஸ் ஜோடி சிறப்பாக ஆடி இருவரும் அரைச் சதம் அடித்தனர்.

ஒரு ஓட்டம் எடுத்தால் வெற்றி பெரும் நிலையில் கெய்ல் பந்து வீச்சில் மிட்செல் மார்ஸ் 53 ஓட்டங்களில் ஹோல்டரிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.

16.2 ஓவரில் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய டேவிட் வோர்னர் 56 பந்துகளில் 89 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.