Developed by - Tamilosai
அவுஸ்திரேலியாவில் இருந்து அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக மூன்று ரொக்கெட் ஏவுகணைகள் ஏவப்படவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் குறித்த மூன்று ஏவுகணைகளும் ஏவப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி நிறுவனம் அமெரிக்காவிற்கு வெளியிலுள்ள வணிக வளாகமொன்றில் இருந்து ரொக்கெட் ஏவுகணைகளை ஏவுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.