Developed by - Tamilosai
கடந்த 19 நாட்களுக்கு முன்னர்15 இலங்கையர்கள் இழுவை படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு பயணித்த போது, அவர்களது இழுவை படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவுஸ்திரேலிய எல்லைக் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கைது செய்யப்பட்டவர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தடுத்து வைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை 4.40 மணியளவில் அவுஸ்திரேலிய விமானப்படைக்கு சொந்தமான ASY-975 விமானம் மூலம் இந்த குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.