Developed by - Tamilosai
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு படகில் பயணித்த 41 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
சட்டவிரோத குடியேற்ற முயற்சியுடன் நேரடியாக தொடர்புபட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 37 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கடலோர காவல்படையினரால் இலங்கையில் இருந்து 41 பேருடன் பயணித்த படகு கிறிஸ்மஸ் தீவில் வைத்து இடைமறிக்கப்பட்டு விசேட விமானத்தில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
குறித்த படகில் 16 வயதுக்கு குறைந்த ஆறு பேரும் 35 வயது வந்தவர்களும் பயணித்துள்ளனர். இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்பு, தொடுவாய் மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நேற்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த குழுவினர் ஒப்படைக்கப்பட்டனர்.