Developed by - Tamilosai
அவிசாவளை-புவக்பிட்டிய-தும்மோதர குமாரி எல்ல-நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த மூன்று பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் யாழிலிலருந்து கொழும்பு-வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர்கள் வீட்டுக்கு சென்ற இவர்கள் கடந்த வியாழக்கிழமை உறவினர்களுடன் எல்ல-நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றுள்ளனர்.
தீடிரென பெய்த கடும் மழையினால் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம்சடுதியாக உயர்ந்துள்ளது இதன் காரணமாக நீராடிக் கொண்டிருந்த 6 ,நபர்கள் நீரில் அடிச்துச் செல்லப்பட்ட நிலையில் மூன்று நபர்களை பிரதேச மக்கள் காபாற்றியுள்ளனர்.
இதில் ஒரு யுவதியும் 2 சிறுமிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 16வயதுடைய எட்மன்-ஜேவதாஸ்-உஷாரா என்பவராவர் உயிரிழந்த நேற்று முன்தினம் சடலமக மீட்கப்பட்டுள்ளன நிலையில்.
மேலும் காணாமல் போன மற்றைய இருவரான பருத்தித்துறையைச் சேர்ந்த எட்மன்-ஜேவதாஸ்-மிதுர்ஷா வயது 14, வேவனி-ஜேசுதாஸ் வயது 29 ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளனர்.