Developed by - Tamilosai
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமான சிலர் நாட்டினை விட்டு வெளியேறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானர் என கூறப்படும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நாட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வலுவடைந்து வரும் நிலையிலேயே இந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.