Developed by - Tamilosai
அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரவித்துள்ளார்.
அதேசமயம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கவும் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் , முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.