Developed by - Tamilosai
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறித்து திருப்திக்கொள்ளாத நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியவுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்க நீதி அமைச்சர் தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படுகின்றமை குறித்து தான் அறிந்திருக்கவில்லை எனவும், தனக்கு அறிவிக்காமலேயே இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அலி சப்ரி, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாட்டில் சட்டமொன்றை உருவாக்கும் நிறுவனமொன்று காணப்படுகின்ற நிலையில், இவ்வாறான செயலணி அமைக்கப்பட்டமை தேவையற்ற ஒன்று என அவர் கூறியுள்ளார்.
நீதி அமைச்சின் ஆலோசனைகள் இன்றி, இவ்வாறான செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் அலி சப்ரி கவலை அடைந்த நிலையிலேயே, அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.