Developed by - Tamilosai
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறும், அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை ஈஸ்டர் அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டி தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் அலரிமாளிகையை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிந்தது.