தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அலம்பில் பகுதியில் கரையொதுங்கிய டொல்பின்கள்!

0 244

முல்லைத்தீவு – அலம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஒன்பது டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலம்பில் கடற்கரையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த டொல்பின்களின் உடல்கள் சிதறிக் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்த மீன்கள் 2 முதல் 6 அடி நீளம் கொண்டவை என்றும் அவற்றின் உடல்களில் பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்டதாகவும் வனஜவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைக்காக உடற் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.